ஜனநாயகமான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழையுங்கள் -மஹிந்த வேண்டுகோள்


desappiriya

போலியான செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலமே ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஏனையவர்களுக்கு கவலையை ஏற்படுத்தாத வகையில் தேர்தல் இடம்பெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏனையவர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். தனக்கு இருக்கும் உரிமை ஏனைய வேட்பாளர்களுக்கும் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>