கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை


school (5)

அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் கூடியளவு பேர் (425) சித்தியடைந்துள்ளனர்.

கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை ஆகிய பிரதேசங்களில் கல்முனை பதீமா கல்லூரி 94 மாணவர்களும்,மருதமுனை அல் மனார் தேசிய கல்லூரியில் 23 மாணவர்களும், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலயத்தில் 19 மாணவர்களும்,கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 18 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

குறித்த கல்வி வலயத்தில் முதலாமிடத்தினை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளதோடு அப்பாடசாலை அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 23 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தியடைந்துள்ளார்கள் . இதில் ஹலிலுல் ரஹ்மான் அஸ்றிப் அஹமட் என்ற மாணவன் புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது கல்முனை கல்வி வலயத்தில் இப் பரீட்சையில் பெற்ற அதிகூடிய புள்ளி இதுவாகும்.

இச்சாதனைக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் தமது நன்றியையும், பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து கல்முனை பதீமா தேசிய கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு தனது கருத்தில்

எமது பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 94 பேர் 153 வெட்டு புள்ளிக்கு மேல் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் கூடுதலான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுள்ள பாடசாலை என்ற நற்பெயரை பெற மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் கல்முனை கோட்ட கல்வி அதிகாரிகள், கல்முனை வலய கல்வி அதிகாரிகள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் அனைவரும் வெற்றிக்கு அயராது பாடுபட்டு உள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ஆசிரியர்களின் அயராத உழைப்பு போற்றுதலுக்குரியது. இறைவனின் ஆசி பெற்ற இந்த பாடசாலை அண்மைக்காலமாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலை 2019 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் இம்முறையும் சாதனை படைத்துள்ளது. இப்பாடசாலையில் மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்
19 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் கருத்து தெரிவிக்கையில்

குறிப்பாக இப் பாடசாலை 20 வருடங்களுக்கு பின்னர் அதிகூடிய மாண்வர்கள் சித்தி பெறுபேறுபெற்று சாதனை புரிந்துள்ளது.இச்சாதனைக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் கலையரசன் தனது கருத்தில்

எமது பாடசாலை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் 18 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். கடந்த வருடம் 8 பேர் சித்தியடைந்த போதிலும் மேலதிகமாக இம்முறை 10 பேர் அதிகரித்துள்ளனர்.இச்சாதனைக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்முனை வலயத்தில் 425 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தெரிவித்துள்ளார்.

வலயத்திலுள்ள 5 கோட்டங்களின் பெறுபேறுகள் வருமாறு : கல்முனை (முஸ்லிம்) – 110 கல்முனை (தமிழ்) – 131 சாய்ந்தமருது – 66 நிந்தவூர் -60 காரைதீவு -58 கல்முனையில் தனியொரு பாடசாலை அதிகூடிய 88 மாணவர்களுடனான சித்தியைப்பெற்றிருப்பது கல்முனை கார்மேல் பதீமா தேசிய கல்லூரியிலாகும்.
அதிகூடிய 191 புள்ளிகளை மருதமுனை அல்மனார் மகாவித்தியாலய மாணவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்முனை தமிழ் பிரிவில் சித்தி பெற்ற 131 மாணவர்களுள் 88பேர் கல்முனை பதீமாவைச் சேர்ந்தவர்களாவர்.

கடந்தவருடம் கல்முனை வலயத்தில் 317 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றிருந்தனர். வலயத்திலுள்ள 5 கோட்டங்களின் பெறுபேறுகள் வருமாறு : கல்முனை (முஸ்லிம்) – 120 கல்முனை (தமிழ்) – 85 சாய்ந்தமருது – 44 நிந்தவூர் -42 காரைதீவு -26 கல்முனையில் தனியொரு பாடசாலை அதிகூடிய 63 மாணவர்களுடனான சித்தியைப்பெற்றிருந்தது கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியிலாகும்.
கல்முனை தமிழ் பிரிவில் சித்தி பெற்ற 85 மாணவர்களுள் 63பேர் கல்முனை பதீமாவைச் சேர்ந்தவர்களாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)

-பாறுக் ஷிஹான்-
school (2)

school (3)

school (4)

school (1)

school (5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>