அகதிகள் படகு கவிழ்ந்து 13 பேர் பலி, டியுனிசியாவில் சம்பவம்


download

டியுனிசியாவில் படகு ஒன்று கடலில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய தரைக் கடல் பகுதியில்  இப்போது மோசமான வானிலை, கடல் கொந்தளிப்பு நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.  இதனை அறியாமல், தப்ப முயன்ற அகதிகள் கப்பல்கள் கடந்த சில நாட்களாக விபத்தில் சிக்கி மூழ்கி  வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே டியுனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கியபோது மோசமான வானிலை காரணமாக கடல் அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்து தகவல் அறிந்த இத்தாலி கடற்கரை படையினர், இரு மீட்பு கப்பல்களுடன் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 22 பேரை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது,  உயிரிழந்த 13 பெண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மாத்திரம் மத்தியதரைக் கடலில் இது போன்ற விபத்துகளில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>