அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் அதிகரிப்பு, டிரம்ப் நிருவாகம் மௌனம்


americ

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்திலுள்ள கன்சாஸ் நகரில் அமைந்துள்ள மதுபான இரவு விடுதி ஒன்றில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாதோர் திடீரென நடாத்திய இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது மர்மமாக உள்ளதாகவும்,  தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை பொலிஸார் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் பெருகி வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த டிரம்ப் நிருவாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பொடுபோக்காக இருப்பதாகவும் அந்நாட்டு மக்களினால் விசனம் தெரிவிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>