கஜினி பல்கலையில் குண்டுத் தாக்குதல், 8 மாணவிகள் காயம்


Afghanistan--Eight-girl-students-wounded-in-a-blast-inside_SECVPF

ஆப்கானிஸ்தானின் கஜினி நகரில் உள்ள கஜினி பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 8 மாணவிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், அங்கிருந்து படைகளை வாபஸ் பெறுவதற்காகவும், தலீபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எனினும், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ள நிலையிலும், இதுவரையில் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையே உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே இந்த தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>