கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கக் கோரி நீதிமன்றில் மனு


jail

ஜனாதிபதி தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உள்ளிட்ட அந்த ஆணைக்குழுவின் நான்கு உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தலின் போது சிறையில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், அதனூடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் மனுதாரர்கள் தமது மனுவில் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>