ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 31 ஆம் திகதி, 7 லட்சம் பேர் விண்ணப்பம்


close up of hand and voting ballot

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக கோரி 7 இலட்சம் அரச ஊழியர்கள் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், உரிய தகமைகள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 31 ஆம் திகதியும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.    (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>