வாக்குச் சீட்டை கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்த இளைஞன் கைது


arrest_and_remand

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு வழங்கப்பட்ட வாக்குச் சீட்டை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படமெடுத்த இளைஞர் ஒருவர் தலகஸ்பே வாக்குச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் தற்பொழுது பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், எல்பிட்டிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் பின்னர் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பிடிகல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (11) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>