கோட்டாபய – ஹிஸ்புல்லா உடன்படிக்கை – நாமல் கருத்து


namal 7

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ வேறு எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எந்தவொரு அரசியல் ரீதியிலான ஒப்பந்தமும் செய்யவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தப் பதிவை அவர் இட்டுள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறி இதுபோன்ற உடன்படிக்கையொன்றுக்கு செல்வதற்கு பொதுஜன பெரமுனவுக்கு எந்தவொரு அவசியமும் இல்லையெனவும் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை தொடர்புபடுத்திக் கூறிய கருத்துக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா பெற்றுக் கொள்ளும் வாக்குகள் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கிடைக்கும் வாக்குகளாகும் என எஸ்.பீ. திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  (மு)

6 comments

  1. Mohamed Nizaar Mohamed Mufeez

    ivenga eppe unmaya sonne

  2. Broker of hisbulla

  3. அடே டயஸ்போரா டெய்லி சிலோன் நாமல்ட டிவிட்டரில் போய் பாரு அப்படி உடன் படிக்கை காணோம்டா

  4. மண்டல கச்சால். ஒருவன் ஒப்பந்தம் செஞ்ச என்று சொல்றான் அடுத்தவன் இல்ல என்று சொல்றான்

  5. நம்பிட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>