புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு


20151003131132_IMG_3260

கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/கிண்/பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் இம் முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14) காலை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இப் பரிசில்களை கிண்ணியா நகர சபையின் உறுப்பினரும்,இப் பாடசாலையின் பழைய மாணவருமான நிஸார்தீன் முஹம்மட் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்தார்.

இதன் போது முஹம்மட் கதீப் அஹமட் அபூ 161 புள்ளிகள்,முஹம்மட் இர்ஸாத் அன்சப் அமர் 154 புள்ளிகள்,மகரூப் முஹம்மட் அஸ்ஸாதிக் 145 புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கே இவ்வாறு பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா,வகுப்பாசிரியை திருமதி கே.சித்தி றமீஸா அக்மல்,ஆசிரியர் ஏ.ஜே.அஸாம் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் றிபாய் உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.(அ)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-
20151003131531_IMG_3271

20151003131555_IMG_3277

20151003130859_IMG_3258

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>