அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு


ACMC-logo

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தெரிவித்தார்.

கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இடம் பெறவுள்ள இம் மாநாட்டில் திருகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கிய பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பங்கேற்கவுள்ளார்கள்.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன்,கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் ,கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.(அ)

-ஹஸ்பர் ஹலீம்-

One comment

  1. அப்படி என்ன நடந்தது முன்புமுஸ்லீம்களுக்கு ? தற்போது முஸ்லீம்களுக்கு நடந்து கொண்டிருப்பது பொரும் கேடு. தற்போதய உங்கள் இந்த ஆட்சியை விட முன்னய ஆட்சி நல்லம். எமக்கு கோத்தா ok. நீங்க பொத்திகிட்டு இருந்தால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>