ஹம்பாந்தோட்டை நகராதிபதிக்கு பிணை


1564728828-eraj-fernando-sentenced

ஐந்து வருட விளக்கமறியல் வழங்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகராதிபதி எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்யுமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நகராதிபதியினால் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை ஆராய்ந்ததன் பின்னர் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு இலட்சம் ரூபா பிணை மற்றும் 5 சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பில் ஹம்பாந்தோட்டை நகராதிபதி ராஜ் ரவீந்திர பெர்னாண்டோவுக்கு ஐந்து வருட விளக்கமறியல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>