கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் இலவச செயற்திட்டம்


IMG-20191027-WA0008

வளமான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் நடைமுறைப்படுத்தல் மூலம் இம்முறை சாதரண தர O/L பரீட்சை எழுதும் மாணவர்களை சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் நோக்கத்தில் இலவசமாக கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கடந்த 06 மாத கால செயற்திட்டமொன்று இடம்பெற்றது.

இதற்கமைய பரீட்சை எழுதும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுடனான சந்திப்பு கடந்த வெள்ளியன்று (25) கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலய பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் கல்முனை சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி. எம்.எச். ரிஸ்பின், அமைப்பின் செயலாளர் எஸ்.எல். இப்ராஹிம்,பொருளாளர் நஜீம்தீன் மற்றும் நலன்புரி செயலாளர் அஷ்சேய்க் யூ.எல். இக்பால் அவர்களும் பாடசாலை சார்பாக அதிபர் எம். ரசாக், பிரதிஅதிபர் ஜின்னா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் மற்றும் ஒத்தாசைகள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகள், மாணவர்களை பரீட்சை எழுத உள ரீதியாக தயார்படுத்த வேண்டிய அவசியத்தின் முக்கியத்துவம் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இறுதியாக மாணவர்களுக்கான கடந்த கால பரீட்சை வினாக்கள் அடங்கிய புத்தகங்கள் கலந்து கொண்ட கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்களால் உரிய மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.(அ)

-எம்.என்.எம்.அப்ராஸ்-
IMG-20191027-WA0023

IMG-20191027-WA0003

IMG-20191027-WA0019

IMG-20191027-WA0012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>