பக்தாதியின் பின் சதாம் ஹுசைனின் இராணுவ அதிகாரி ஐ.எஸ். தலைவன்


image_5c836382fa

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் இராணுவத்தில் சேவையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராசிரியர் என அழைக்கப்படும் இவரின் பெயர் அப்துல்லா கர்தாஸ் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் பயங்கரவாதி அபுபக்கர் பக்தாதி சிறைப்படுத்தப்பட்டிருந்த போது அவருடன் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர் எனவும் கூறப்படுகின்றது.

இவர் பக்தாதியில் நெருங்கிய கொள்கை வகுப்பாளராக செயற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஐ.எஸ். அமைப்பின் செய்தி ஊடகமான அமாக் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பிரகாரம், அல் பக்தாதியினால் கடந்த ஆகஸ்ட் மாதமே தனது அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு கர்தாசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் மேலும் கூறியுள்ளன.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>