ஆர்ப்பாட்டத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் லெபனான் பிரதமர் இராஜினாமா


ee

லெபனானில் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக நீடித்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டு பிரதமர் சாத் ஹரிரி இராஜினாமா செய்துள்ளார்.

லெபனான் சிக்கலை எதிர்கொண்டிருப்பதாகவும் அதிர்ச்சி தரும் தீர்வொன்று தேவையாக உள்ளதாகவும் ஹரிரி குறிப்பிட்டுள்ளார். அவரது இராஜிமான அறிவிப்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் வட்ஸ்அப் அழைப்புகளுக்கு வரி திட்டம் ஒன்றை அறிவித்ததைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பட்டம் நீடித்து வந்தது. உலகில் அதிக கடன் அளவைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக லெபனான் உள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக லெபனானில் கடந்த 10 நாட்களாக பல அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தாகவும் அச்செய்திகள் தெரிவித்துள்ளன.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>