சுயாதீன சோதிடர்கள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஹேஷ்யம்


NW03

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார் என சுயாதீன சோதிடர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று(05) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத்தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 சுயாதீன சோதிடர்களான தாங்கள் கருத்துக்களை வெளியிடும் உரிமையைப் தடுக்கும் விதத்தில் விமல் விரவன்ச, உதய கம்மன்பில போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மீது பழி சுமத்தும் விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளதாக பிரபல சோதிடர் கே. ஏ. யூ சரத்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வார இறுதியில் வாரப்பத்திரிகையொன்றில் பிரசுரமான சோதிடர் பக்கத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றியீட்டுவார் என்று விஞ்ஞானபூர்வமாக கருத்து வெளியிட்டதை விமர்சித்திருக்கும் வீரவன்ச, கம்மன்பில போன்றோர் இதற்காக நாம் ஒரு கோடி ரூபா வீதம் பெற்றுக்கொண்டதாகப் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுளளனர்.

இந்த உண்மைக்குப் புறம்பான கருத்து சோதிடர்களான எம்மை அவமானப்படுத்துவதாகும். இது தொடர்பில் நாம் நீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>