சஜித்தின் வெற்றியை கண்கூடாக காண்கின்றோம்- ரவூப் ஹக்கீம்


rauff hakeem

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பு நெருங்கி வருவதை நாங்கள் கண்கூடாக காண்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (06) உடதும்பர, ஹசலக பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் எங்களது முயற்சி வெற்றிபெற்ற பின்னர் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணையத் தொடங்கியுள்ளனர்.

தங்களால் மாத்திரம்தான் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்கலாம் என மேடைகளில் பேசுத்திரிகின்றனர். ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை நாங்கள் தெளிவான முறையில் சமர்ப்பித்துள்ளோம். இது இவ்வாறிருக்க, தற்போது இன்னுமொரு விசாரணைக் குழுவை நியமித்துள்ளனர்.

மக்களை ஏமாற்றும் எதிரணிக்கு சோரம்போகாமல், சரியான முறையில் சிந்தித்து நல்லதொரு ஜனாதிபதியை தெரிவுசெய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. கறைபடியாத கரம்கொண்ட எங்களது வேட்பாளர் சஜித் பிரேமதாசவே இந்த நாட்டுக்கு பொருத்தமான தலைவராக வருவார் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

3 comments

  1. அப்போ நீங்க முஸ்லிம் பகுதிக்கு மாத்திரம்தான் போயிருப்பீங்க பொஸ்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>