வேட்பாளருக்கு ஆதரவு தேடி வீடுகளுக்கு செல்வோருக்கான சட்ட ஒழுங்கு – பொலிஸ் அறிவிப்பு


Ruwan Gunasekara

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் போது 11 பேருக்கு அதிகமானோர் செல்வது சட்டவிரோதமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீடு வீடாக செல்பவர்கள் தாம் எடுத்துச் செல்லும் கையேடுகள், துண்டுப் பிரசுரங்கள் என்பவற்றை பாதையில் காட்சிப்படுத்தி வைத்திருத்தல், வேட்பாளர்களை ஆதரித்து பாடல்களை ஒலிபரப்புதல், பட்டாசு கொழுத்துதல் என்பனவும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு விநியோகிக்கும் கையேடுகளிலும், துண்டுப் பிரசுரங்களிலும் அவற்றை அச்சு செய்தவர்களின் பெயர்கள் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

11 பேருக்கு அதிகமானோர் வீடுகளுக்கு சென்றால், அது சட்டவிரோத ஊர்வலமாக கருதப்படும். இந்த சட்டங்களை மீறுவோருக்கு எதிராக தேர்தல் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>