வேட்பாளர் கோட்டாபயவின் கல்விக் கொள்கை பாரதூரமானது- அமைச்சர் அகில


akila viraj kariyawasam

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள கல்விக் கொள்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் வெட்டுப்புள்ளி முறைமை ஒழிப்பு பாரதூரமானது எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெட்டுப்புள்ளி முறைமையை இல்லாதொழிக்க போவதாக கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கை பிரகடணத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றப்போவதாகவும் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து மேற்குறிப்பிட்ட கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் கல்வியின் தரம் குறைந்து கல்வி துறை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்.

எனவே கோட்டாபய ராஜபக்ஷவின் கல்வி கொள்கை புத்திஜீவிகளால் தயாரிக்கப்பட்டதாக கூறமுடியாது. கல்வித் துறையில் அறிவு படைத்தோர் இவரது கொள்கை பிரகடணத்தை தயாரித்து இருக்க முடியாது. இது மிகவும் பாரதூரமானது எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி துறையை கட்டியெழுப்பவும் தரத்தை அதிகரிக்கவும் நாம் பூரண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எதிரணியை ஆட்சிக்கு கொண்டு வந்து மீண்டும் பழைய நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்வதா? அல்லது முன்னேற்றம் அடைவதா? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>