ரிசாட்டின் வழிகாட்டலில் சஜித் மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வரம் விஜயம்


Sajith-Visit-Thiruketheeswaram-Mannar-1

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று காலை (08) மன்னார் ஆயர் இல்லம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே  இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாஸ குழுவினர்  மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சுமார் அரைமணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 இதன் பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்த  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோர் ஆலயத்தின் அறங்காவலர்கள் மற்றும் ஆலய குருக்களையும் சந்தித்து பேசியுள்ளனர்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>