கோட்டாபயவுக்கு எதிராக கலாநிதி சுமங்கல தேரர் உண்ணாவிரதம்


image_c07577d940

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டுள்ளார் என்றால், அதனை மூன்று நாட்களுக்குள் தெளிவுபடுத்துமாறு வேண்டி கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று (10) உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

“எமது தாயகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்க்கும் கோட்டாபய ராஜபக்ஸாவின் சதியிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்” எனும் கருத்தில் பெனர் ஒன்றையும் காட்சிப்படுத்திக் கொண்டு தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த தேரருடன் இன்னும் பல பிக்குகளும் பொது மக்களும் அந்த இடத்தில் அமர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தேரர் கூறியுள்ளதாவது,

“தனக்கும் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட கோபமும் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் இன்னும் 34பேர் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் அமெரிக்கப் பிரஜையொருவரும் காணப்படுகின்றமை ஏனையவர்களுக்குச் செய்யும் ஒரு அநீதியாகும். கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜை ஒருவர் என்பதாகவே நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இலங்கை தேர்தல் சட்டத்துக்கு முரணாக கோட்டாபய  செயற்படுவது வெளிப்படையாக தெரிவிகின்றது. தேர்தல்கள் திணைக்களத்தையும், பொலிஸார், நீதிமன்றம் மற்றும் நாட்டு மக்கள் ஆகியோரையும் ஏமாற்றும் விதத்தில் அவர் செயற்படுகின்றார். இது தவறான ஒரு நடவடிக்கையாகும். இதனை உறுதிப்படுத்திக் காட்டிக் கொடுப்பது எனது பணியாகும்.

கோட்டாபயவுக்கு முடியுமானால்,எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் தான் அமெரிக்க பிரஜை அல்லவெனவும், இலங்கை பிரஜைதான் எனவும் நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறு செய்தால், பிரச்சினையில்லை.

இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பேர்கர் உட்பட சகல தரப்பினரையும் இந்த நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தன்னுடன் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>