கோட்டாபயவின் பிரஜாவுரிமை குறித்து கொழும்பு அமெரிக்க தூதரம் தகவல் தர மறுப்பு


gotab

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பிரஜாவுரிமை தொடர்பில் எந்தவித உத்தியோகபுர்வ அறிவிப்பையும் விடுக்க முடியாதுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

சகோதர ஊடகமொன்று அமெரிக்க தூதரகத்திடம் வினவியதற்கே அதிலுள்ள அதிகாரியொருவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அமெரிக்காவின் தனிப்பட்டவர்களுக்குள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, பிரஜாவுரிமை அல்லது குடிவரவு குடியகல்வு விடயங்கள் தொடர்பான விடயங்களில் எந்தவித அறிவிப்பையும் தூதரகத்துக்கு மேற்கொள்ள முடியாதுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பிரஜாவுரிமை தொடர்பிலும் எந்தவொரு உத்தியோகபுர்வ அறிவிப்பும் மேற்கொள்ள முடியாதிருப்பது இதனாலாகும் எனவும் அப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>