முதல் தடவையாக வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு


NIC-Smart-Sri-lnka-newsfirst-415x260

ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாக இம்முறை வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு இதுவரையில் ஆள் அடையாள அட்டை கிடைக்கப் பெறாவிடின், அவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் விசேட கடிதம் செல்லுபடியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தில் அடையாள அட்டை பதிவு செய்யும் “காட்கள்” தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால், அடையாள அட்டை விநியோகம் தாமதமடைந்துள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடையாள அட்டை கோரியவர்களுக்கு தற்காலிக கடிதமொன்றை ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கியுள்ளதாகவும், இந்தக் கடிதத்தைக் காட்டி உரிய நபர் வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>