தேர்தல் பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் முடிவு


elec

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் யாவும் நாளை(13) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாளை நள்ளிரவுக்குப் பின்னர் பிரசாரங்களை முன்னெடுப்பது மற்றும் வீடுகளுக்குச் சென்று பிரசாரங்களை மேற்கொள்வது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும்.

எதிர்வரும் சனிக்கிழமை காலை ஆரம்பமாகவுள்ள ஜனாதிபதி தேர்தலையொட்டி 14 ஆம் , 15 ஆம் திகதிகளில் நாட்டில் அமைதி பேணப்படும், அதேநேரம்  யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சுயமாக தீர்மானிப்பதற்குரிய காலமாக இக்காலப்பகுதி இருக்க வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

இவற்றை மீறி இக்காலப்பகுதியில் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவோர் மற்றும் விளம்பரங்களை ஔி, ஒலிபரப்புச் செய்யும் ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படுமென்றும் தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>