மேலும் பல வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகை- தே.ஆ.


pre-matrimonial-investigation-services-250x250

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக  மேலும் 17 பேர் கொண்ட சர்வதேச கண்காணிப்பு குழுவினர் இன்றும் நாளையும் இலங்கையை வந்தடைவர் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் இலங்கைக்கு வருகை தருவதாகவும் அந்த கண்காணிப்புக் குழுவில் இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, தென் ஆபிரிக்கா, மாலைதீவு, பூட்டான், பிலிப்பைன்ஸ் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்க இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>