கோட்டாபயவிடம் இல்லாத தீர்வு சஜித்திடம் உள்ளது- ஆர்.சம்பந்தன்


sampanthan

கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பங்கீடு தொடர்பில் முறையாகக் கூறப்படவில்லையெனவும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக்கூட்டம் நேற்று (11) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதியுச்ச அதிகாரப் பங்கீட்டுடன் நான் அரசியற் தீர்வினைத் தருவேன் என்று கோட்டாபயவின் விஞ்ஞாபனத்தில் கூறியிருக்கின்றாரா? அரசியற் தீர்வு சம்பந்தமாக எதையும் சொல்லியிருக்கின்றாரா? இல்லை, அவ்வாறான ஒருவருக்கு நாங்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்.

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல், நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும்.

அதனை நாங்கள் பெறுவதாக இருந்தால், அதனை நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால். எமது நியாயமான நிலைப்பாட்டை உணர்ந்திருக்கும் சர்வதேச சமூகம் எங்களுடன் இருக்கின்றபோது இவற்றை நிறைவேற்றுவதாக இருந்தால் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவது அதற்கு உதவாது, அதற்குப் பாரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இதனை அனைவரும் உணர்ந்து தமது வாக்குகளை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>