துருக்கி ஜனாதிபதி கட்டார் சென்று அமீருடன் சந்திப்பு


New Picture

துருக்கி ஜனாதிபதி ரசீப் தையிப் எர்துகான் கட்டார் நாட்டுக்குச் சென்று அந்நாட்டின் அமீர் செய்க் தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

சவுதி, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் என்பன கட்டார் நாட்டின் மீது நிபந்தனைகளை விதித்து தடைகளை விதித்த போது அந்நாட்டுக்கு துருக்கியும், ஈரானும் ஆதரவு கொடுத்து பக்க பலமாக நின்றன.

துருக்கி ஜனாதிபதியின் விஜயத்தினுடைய நோக்கம் இரு நாடுகளுக்கிடையிலுள்ள உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது மாத்திரமன்றி, கட்டாருக்கு நாடு கடத்தப்பட்ட பலஸ்தீன் பத்தாஹ் அமைப்பின் உறுப்பினர் மொஹமட் தஹ்லானை கைது செய்வதும் இவரது விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது .

இது தொடர்பிலும் துருக்கி ஜனாதிபதி கட்டார் அமீருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற இராணுவப் புரட்சியின் போது, 58 வயதுடைய தஹ்லான் துருக்கி ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஒப்பந்த அடிப்படையில் இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.     (மு)

 

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>