புதிய அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவு குறித்து TNA விளக்கம்


sumanthiran

கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் எடுக்கப்படும் சரியான நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுடன் கூடிய யதார்த்த ரீதியிலான தீர்மானமொன்றைக் கொண்டுவருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவுக்கு வழங்கியிருந்த வாக்குறுதியை, புதிய அரசாங்கம் செயற்படுத்துமாயின் அதற்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று (26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>