பதவிகளைப் பொறுப்பாக பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி அமைச்சர்களுக்கு உரை


gotaaa

இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் என்பது தமக்குக் கிடைத்த சலுகைகள் அல்ல என்றும் அவற்றை மிக முக்கியத்துவம் மிக்க பொறுப்பாக கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புடனேயே பொதுமக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்.  அதனை நினைவில் நிறுத்தி செயற்படவேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுக்களுக்கான துறைகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இவை தமது கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப  இடம்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>