
தம்பலகாம பிரதேச செயலகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
தம்பலகாம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (27)மாலை இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
நீண்ட காலம் இடம் பெயர்ந்தோர் மீளக்குடியேற்றுதல் செயலணி திட்ட அலகின் மூலமான நிதியில் இருந்து சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் 25 விளையாட்டு கழகங்களுக்கு இதன் போது உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி ஹாஜியார், ஆர்.எம்.றெஜீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(அ)