
மாலைத்தீவுகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நிதி மோசடி தொடர்பான வழக்கின் விசாரணையிலேயே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அவரது ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் அபிவிருத்திக்காக தீவுகள் பலவற்றை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு விட்டதன் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. (மு)