
அரச பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சுரக்சா காப்புறுதித் திட்டம் ஒரு தேசிய பொறுப்பு என கருதி அதனைத் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் செயற்படுத்தும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.
விசேட அறிவிப்பொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச பாடசாலைகளிலுள்ள நான்கு மில்லியனுக்கும் அதிகமான பிள்ளைகளின் நலன்களை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை இந்த அரசாங்கம் கைவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த திட்டத்திலுள்ள குறைகளைச் சரிசெய்து தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தான் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (மு)