காலநிலையினால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு விசேட சலுகை- ப.தி.


GCE (O:L) Examination

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அருகிலுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் முறையாக உறுதிப்படுத்தப்பட்ட பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாடாளவிய ரீதியில் 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, ஏழு இலட்சத்து 17,008 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

நாளை (02) ஆரம்பமாகும் இப்பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>