19 இல் திருத்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு ஐ.தே.கட்சி தயார்- கிரியெல்ல


UNP

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து திருத்தங்களை ஏற்படுத்த வேண்டுமானால், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக அக்கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கட்சியின் அனுமதியுடன் அந்த மாற்றத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.

இப்போது  19 ஆவது திருத்தச் சட்டம் தடையாகவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இந்த சட்டத்தில் எந்தவிடயம் மாற்றப்பட வேண்டியுள்ளது என அரசாங்கத்திடம் கேட்கின்றோம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் மாற்ற வேண்டியது என்ன என்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த நாம் தயாராகவே உள்ளோம். எடுத்த எடுப்பில் அதற்கு ஆதரவு வழங்குவதாக கூற முடியாதுள்ளது. அதில் குறைகள் இருப்பதாக எமக்கு தெரியவந்தால், அது குறித்து எமது அவதானத்தைச் செலுத்துவோம் எனவும் கிரியெல்ல எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>