வட மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் பொறுப்பேற்பு


ajm muzammil

தன்னைப் போன்ற முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் புராதன பௌத்த உரிமத்தைச் பறைசாட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வட மேல் மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முழு முஸ்லிம் சமூகத்துக்கும் கிடைத்துள்ள கௌரவமாகும் என மேல் மாகாணத்தில் ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்ற ஏ.ஜே.எம். முஸ்ம்மில் தெரிவித்துள்ளார்.

வட மேல் மாகாண ஆளுநர் பதவியை பொறுப் பேற்கும் நிகழ்வு இன்று மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், வட மேல் மாகாண ஆளுநர் காரியாலய வளாகத்தில் அமைந்துள்ள புராதன ஜயசிறி மகா போதி கிளைக்குச் சென்று நியமனம் பெற்றுள்ள ஆளுநர் முஸம்மில் தாமரை மொட்டு தட்டை வைத்து மரியாதை செலுத்தியுள்ளதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.

அத்துடன், மாகாண வளாகத்தில் உள்ள பௌத்த புராதன நிகழ்வுகளிலும் நியமனம் பெற்ற ஆளுநர் முஸம்மில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   (மு)

01

05

02

04

03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>