
புதிய ஆளுநர்கள் இருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று (04) மாலை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மற்றும் வட மத்திய ஆகிய மாகாணங்களுக்கே இவ்வாறு இருவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்த வகையில், அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாண ஆளுநராகவும் வட மத்திய மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். (மு)