ஆசிரிய உதவியாளர்கள் நியமனத்துக்கு ஆசிரிய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு


joseph-stalin-web

ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேரை நியமிப்பதற்கு அமைச்சர் பந்துல குணவர்தன கொண்டுவந்துள்ள யோசனைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அச்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,

ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதாயின் இலங்கை ஆசிரியர் சட்டக் கோவையின் கீழால் அது இடம்பெற வேண்டும். ஆட்சேர்ப்பு, சம்பளம் உட்பட அனைத்தும் இந்த சட்டக் கோவைக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

ஆசிரியர் சேவையில் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து எல்லோரினாலும் முன்வைக்கப்படுகின்றது. ஆசிரிய உதவியாளர்கள் என க.பொ.த. உயர்தரம் படித்தவர்களை 10 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு நியமிப்பது, மனித உழைப்பை உரிஞ்சும் பொருத்தமற்ற நடவடிக்கையாகும். இது எமது கல்வித் துறையின் உன்னத நிலையைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் கல்வி அமைச்சர் கொண்டுவந்துள்ள இந்த யோசனை குறித்து கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் கருத்தை அறிய விரும்புகின்றோம். இதனை அரசாங்கம் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிரியர் சங்கங்கள் இதனை முற்றாக எதிர்க்கின்றது. இதனையும் மீறி அரசாங்கம் செயற்பட முற்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம்.

அதற்கும் அரசாங்கம் செவிசாய்க்க வில்லையாயின் நீதி கோரி நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>