மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்த ஆளும் தரப்பு சம்மதம்- மனோ கணேசன் எம்.பி.


thumb_large_mano

பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 01 ஆம் திகதி கலைக்கப்பட்டால் ஏப்ரல் இறுதியில்  தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டியுள்ளதால் அது தொடர்பிலும்  இன்று கலந்துரையாடினோம். இதன்போது ஆணைக்குழுத் தலைவர் மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடாத்துவது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, ஆளும் தரப்பினரிடமிருந்து இதற்கு எந்தவித எதிர்ப்பும் வெளியிடப்பட வில்லையெனவும் மனோ கணேசன் எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>