தேர்தல் தோல்வி குறித்து நவீன் திஸாநாயக்க கருத்து


naveen

அரசியல் நெருக்கடி நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு கட்சியை பிளவுப்படுத்த எவராலும் முடியாது எனவும், கட்சியைப் பலப்படுத்த அடிமட்டத்தில் இருந்து மாற்றங்களை கொண்டுவர தாம் தயாராகவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிகொதாவில் இன்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வி அடைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இத்தோல்விக்கு ஒரு  தரப்பினரை மாத்திரம் குற்றவாளியாக்குவது பொருத்தமானதல்ல.

பொதுஜன பெரமுனவின் வெற்றியை  சிங்கள பௌத்த வாக்குகளே தீர்மானித்துள்ளது. சிங்கள மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தினை முழுமையாக புறக்கணிப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரையில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>