அனுமதிப் பத்திரம் வழங்கும் முறைமை ரத்து, நாளை முதல் அமுல் !


image_e4be3c76b8

மணல், கல் மற்றும் மண் என்பவற்றை எடுத்துச் செல்வதற்கு நடைமுறையில் இருந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் முறைமையை நீக்கிவிடுவதற்கு அமைச்சரவை இன்று (04) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (04) நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நாளை (05) முதல் நடைமுறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையினால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

மணல், கல் மற்றும் மண் என்பன அகழ்வு செய்யும் இடங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சுற்றாடல் அமைச்சின் உதவியுடன் குழுக்கள் அமைக்கப்படவும் இன்றைய அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>