பொதுத் தேர்தலில் டில்சான் போட்டியிடுவதாக உறுதி


Sri Lanka's Tillakaratne Dilshan

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் காலி மாவட்டத்தில் போட்டியிடுவதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் திலகரத்ன டில்சான் தெரிவித்துள்ளார்.

களுத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியுள்ளதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைப் போன்றே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் என்னைச் சந்தித்தனர். அவர்கள் இருவரும் என்னை அடுத்த பொதுத் தேர்தலில் நிற்குமாறு ஆசீர்வாதம் வழங்கினர். அதற்காக நான் இப்போதே தயாராகி வருகின்றேன்.

அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு வேலைத்திட்டமொன்று அவசியம் இருக்க வேண்டும். விளையாட்டில் கிடைத்த நன்மதிப்பை மீண்டும் கொண்டுவர வேண்டும். அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தன்னாலான ஒரு பலத்தை வழங்குவதற்கும் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>