தோப்பூர் நூரிய்யா அறபுக் கல்லூரிக்கு புதிய நிருவாக கட்டிடமும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வும்


IMG-20200106-WA0034

தோப்பூர் நூரிய்யா அறபுக் கல்லூரிக்கான புதிய நிருவாகக் கட்டிடமும், தளபாடங்கள் கையளிக்கும் வைபவமும் இன்று இடம் பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தோப்பூர் வட்டாரக் குழு தலைவரும் முன்னால் வேட்பாளருமான முஜாஹித் தலைமையில் இடம் பெற்ற இவ் வைபவத்தில் முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்தரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா செலவில் நிருவாக அலுவலகமும் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. இதில் வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந்,மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜஸீலா குஸைடீன்,மத்திய குழுவின் தலைவரும் முன்னால் கனிய மணல் கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளர் அப்துல் றசாக் நளீமி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.(அ)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-
IMG-20200106-WA0033

IMG-20200106-WA0023

IMG-20200106-WA0019

IMG-20200106-WA0012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>