பேருவளை தீவில் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டன


2c7a66a6-3bb6-411b-b1d7-ab9deb8defc4

பிறந்துள்ள 2020ம் ஆண்டு புதுவருடத்தை முன்னிட்டு பேருவளை மருதானை பிரதேச இளைஞர்களால் 350 தென்னை மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன.

பேருவளை கடலில் மருதானை மீன்பிடி துறைமுகத்திற்கு அண்மித்ததாக நிமிர்ந்து நிற்கும் கலங்கரை விளக்குடன், விசாலமான தென்னந்தோப்புடன் கம்பீரமாக கடலில் காட்சியளிக்கும் பர்பரீன் தீவு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பேரபிமானத்தை பெற்றதொரு சுற்றுலா பிரதேசமும், இயற்கை வளமும் ஆகும்.

இத்தீவில் தொன்றுதொட்டே ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காணப்படுகின்றன. இத்தென்னை மரங்கள் இத்தீவின் அழகிற்கு மேலும் அணிசேர்க்கின்றன. என்றாலும் அண்மைக்காலமாக ஏராளமான தென்னை மரங்கள் பழைமையாகி அழிவடைந்தமையினால் நேற்று பேருவளை மருதானை பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் சுமார் முன்னூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் பேருவளை நகரபிதா மஸாஹிம் முஹம்மத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஏராளமான பிரதேசவாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கலந்துசிறப்பித்தனர்.

6ed806c4-233b-487d-ac98-7afdfda5471d

63991675-de48-4e6d-9ddb-097f4b4dc995

2c205afd-9267-4661-9354-d787ba73dd58

73403f18-d2ec-4a1d-aa4c-5aba5cd2c97b

0196d6d9-6f89-49ee-8ab2-be939a4c1fb9

26869662-2f68-4d55-91ec-5b3cc840cf4d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>