முஸ்லிம்கள் ஜனாதிபதியைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்- நீதி அமைச்சர்


nimal_siripala

மதங்களுக்கிடையிலான சகவாழ்வு உள்ள ஒரு நாடே பாதுகாப்பான நாடாகும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை மற்றும் மதங்களுக்கிடையிலான சகவாழ்வு என்பன வெறும் வார்த்தைகளில் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் நடைமுறையிலும் இடம்பெறவேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பினரும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் தவறான சிந்தனையை விதைத்தனர். எனினும் தற்போது முஸ்லிம் மக்கள் அவருடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர் என்றும் அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் செயற்பட்டால் நாட்டை ஒன்றிணைத்து முன்னோக்கி கட்டியெழுப்ப முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியோடு எமக்கு சிறந்த தலைவரொருவர் கிடைத்துள்ளார்.

நாம் எமது பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும். அதன் பிரதிபலன் சகல மக்களுக்கும் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெலிமடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முஸ்லிம் மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>