தேசகீர்த்தி” விருது வழங்கி கெளரம்


IMG-20200113-WA0006

கிண்ணியா நடுத்தீவைப் பிறப்பிடமாகவும், ஆயிலியடி, வசிப்பிடமாகவும் கொண்ட , சமூக சேவையாளரும், வன பாதுகாப்பு வெளிக்கள உத்தியோகத்தரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய மீரா லெவ்வை சியாப்தீன் என்பவர் “தேசகீர்த்தி” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வானது அகில இலங்கை சமாதான நீதவான்களின் பேரவையினால் கடந்த 11ம் திகதி மாலை 3.30 மணியளவில் சுதந்திர சதுக்கம், ஒலிம்பிக் ஹவுஸ், கொழும்பு-07 இல் இடம்பெற்றது.

இவர் தி/கிண்ணியா/நடுத்தீவு அல் இக்பால் வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியினையும், தி/கிண்ணியா/குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் தனது உயர்கல்வியினையும் நிறைவு செய்துள்ளதோடு, கிராம மட்ட அமைப்புகளிலும் தலைமைப் பதவி வகித்து வருகின்றார்.

பொலன்னறுவை மாவட்ட மெதிரிகிரிய பகுதியில் வன பாதுகாப்பு வெளிக் கள உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார் .

இவர் காலஞ்சென்ற மீரா லெவ்வை மைமூன் வீவீ தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(அ)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>