தனியார் பஸ் உரிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்


0011 (1)

மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் திரு.க.செவ்வேள் தலைமையில் நேற்று முன்தினம் (11) மன்னார் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் போக்குவரத்து பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் மற்றும் பேரூந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வினைத்திறனான சேவையை வழங்குவதென்றும் தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கும் இ.போ.சபைக்கும் இடையில் இருந்துவந்த முரண்பாடுகளை தவிர்த்து ஒரு இணைந்த நேர அட்டவணையின் கீழ் சிறந்த சேவையை வழங்குவதென்றும் இருதரப்பினராலும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் போதிய பேரூந்து சேவைகள் இல்லாமல் உள்ள வீதிகளுக்கு பயணிகளின் நலன்கருதி மேலதிகமான பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதென்றும் தேவையேற்படின் மேலதிகமான வழி அனுமதிப்பத்திரங்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இந்த சந்திப்பின் போது வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார். மேலும் , மன்னார் மாவட்டத்தில் முதல்முறையாக இலத்திரனியல் மயமாக்கப்பட்ட பற்றுச்சீட்டுவழங்கும் இயந்திரம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன், இக்கலந்துரையாடல் மூலம் சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரிடமிருந்தும் மிகுந்த வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.(அ)

0022

0011 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>