சஜித்துக்கு கட்சித் தலைமைத்துவம் வேண்டும், வேறு யோசனை வேண்டாம்- ஹர்சன


1542248495-unp-2

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்காது தலைமைத்துவ சபையொன்றை நியமிக்க முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப் போவதில்லையென அக்கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கட்சியிலுள்ள தற்போதைய தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுத் தேர்தலை முகம்கொடுக்க தேவையான தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியிலுள்ள பெரும்பான்மையினரதும் பொது மக்களினதும் எதிர்பார்ப்பு அதுவெனவும், எதிர்வரும் வியாழக்கிழமை இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஸ்ரீமத் மாகஸ் பிரணாந்து மாவத்தையிலுள்ள எதிர்க் கட்சிக் காரியாலயத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>