உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்


court-court-logo-order-5471a0b4dac39-exl

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 61 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தெளஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>