சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் தொடர்பில் பிரதமர் மஹிந்த கருத்து


mahind

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையென பிரதமர மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

வித்தியாசமான கருத்துக் கொண்ட அரசியல்வாதிகள் சிலர் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாடவேண்டும் என கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், அது அரசாங்கத்தின் தீர்மானமாக கருத முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழி அதிகாரிகளுடன் இன்று (14) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளின் போதும் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதற்கு எந்தவித தடையும் இல்லையெனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டில் ஒரு தேசிய கீதமே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், பல்வேறு மொழிகளைப் பேசும் இந்தியாவில் கூட ஒரு மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>