ரஞ்ஜனின் குரல்பதிவு ஊடகங்களில் பரவுவதை நிறுத்த வேண்டும்- அமைச்சர் லக்ஸ்மன் யாபா


Lakshman Yapa Abewardan

ரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் ஊடகங்களில் தொடர்ந்தும் பரவுவதை நிறுத்துவதற்கு தகவல் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் தொடர்பாடல்கள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொல்ஹேன்கொடயில் அமைந்துள்ள தகவல் தொடர்பாடல் அமைச்சில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சமூகத்தின் மத்தியில் நிருவாகத்துறை, அரசியலமைப்புச் சபை, நீதிமன்றம் என்பன குறித்து தவறான கருத்தைப் பதித்து அவற்றின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் விதமான இந்த குரல் பதிவுகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>